மேலும் செய்திகள்
பணி ஓய்வு பாராட்டு விழா
02-Jul-2025
புதுச்சேரி : காவல்துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற போலீசாருக்கு, அரசு கொறடா ஆறுமுகம் நினைவு பரிசு வழங்கினார்.புதுச்சேரி காவல் துறையில் 1987ம் ஆண்டு பணியில் சேர்ந்து, 36 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி பணி ஓய்வு பெற்ற போலீசாருக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது.இந்திரா நகர் தொகுதியில் நடந்த விழாவிற்கு, அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, பணி ஓய்வு பெற்ற போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கினார். இதில், எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், ஓய்வு பெற்ற போலீசார் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.பணி ஓய்வு பெற்ற போலீசார் அனைவரும், அரசு கொறடாவான ஆறுமுகம், போலீஸ் பணியில் இருந்த போது, உடன் பணியாற்றிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
02-Jul-2025