உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சத்தியசோதனை புத்தகம் வழங்கல்

சத்தியசோதனை புத்தகம் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாளையொட்டி, பொது மக்களுக்கு சத்திய சோதனை புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில், காந்தி பிறந்த நாளான நேற்று, சத்திய சோதனை புத்தகம் வழங்கும் விழா, புதுச்சேரி கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு, வழக்கறிஞர் பரிமளம் தலைமை தாங்கினார். காந்தியின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி வினாடி – வினா நடத்தப்பட்டது. சரியான பதில் கூறிய பொதுமக்களுக்கு, புதுச்சேரி வாசகர் வட்டம் தலைவர் பேராசிரியர் மணிமாறன் சம்பத்குமார், சத்திய சோதனை புத்தகத்தை பரிசாக வழங்கினார். நிழ்ச்சியில், வழக்கறிஞர் மதுரை முத்து, ராஜா, ஜோலிவ், ஆசிரியை கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை