உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை

 குடிக்க பணம் தராததால் ஆசாரி தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அருகே மனைவி குடிப்பதற்கு பணம் கொடுக்காதததால், கணவர் தற்கொலை செய்து கொண்டார். வில்லியனுார், பைபாஸ் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல், 36; ஆசாரி. சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று முன்தினம் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர், கொடுக்காததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி