உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் நிதி அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்

புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர் நிதி அமைச்சர் நமச்சிவாயம் பெருமிதம்

புதுச்சேரி : புதுச்சேரியின் வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களுக்கும் பிரதமர் நிதி வழங்குகிறார் என அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். உயர்மட்ட மேம்பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பேசியதாவது: புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலை போக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நான் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது கூட வலியுறுத்தினோம். நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த மேம்பால திட்டத்தை பிரதமர் மோடி ஆசியுடன், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வழங்கியுள்ளார். புதுச்சேரிக்கு பல திட்டங்களை பிரதமர் வழங்கியுள்ளார். சாக்சி என்ற திட்டத்தின் மூலம் கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நிதி வழங்கியுள்ளார். மத்திய பொதுப்பணித்துறை மூலம் ரூ.200 கோடி அளவுக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய விளையாட்டு துறை மூலம் மைதானங்களை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களுக்கும், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க பிரதமர் மோடி நிதி வழங்கி வருகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி