காரைக்கால் சிறையில் கைதிகள் மோதல்
காரைக்கால்: காரைக்கால் கிளைசிறையில் விசாரணைக் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். புதுச்சேரி, காரைக்கால், கோட்டுச்சேரி காவல் நிலைய போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சுந்தரம் மகன் வினோத், 40, என்பவர் காரைக்கால் சிறப்பு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று (நவ.,19) அதே சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ராஜ்குமார் என்பவருக்கும் வினோத்துக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வினோத் அருகில் இருந்த எஃகு குவளையால் ராஜ்குமாரின் தலையில் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். அவர் அரசு மருந்துமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து சிறை துணைக் கண்காணிப்பாளர் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், வினோத் மீது நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.