மேலும் செய்திகள்
ரூ. 5 லட்சம் நகை திருட்டு கடலுாரில் துணிகரம்
06-Sep-2025
புதுச்சேரி: தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கி, பைக் மற்றும் நகைகளை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கூடப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரிஷ்மணி, 25; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், கடந்த 31ம் தேதி இரவு கடலுாரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். தவளக்குப்பம் அருகே சென்றபோது, அரிஷ்மணியை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தலையில் தாக்கினர். நிலை தடுமாறி கீழே விழுந்து அரிஷ்மணி மயக்கம் அடைந்தார். இதையடுத்து, மயக்கம் தெளிந்து பார்த்தபோது, ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையா சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே முகம் மற்றும் கைகளில் காயத்துடன் இருப்பது தெரியவந்தது. அவருடைய விலை உயர்த்த பைக், மொபைல், ஒரு சவரன் மோதிரம், 1,500 ரூபாய் ஆகியவை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Sep-2025