தனியார் கம்பெனி ஊழியர் மாயம்
புதுச்சேரி : உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் பேரிக், 52; துத்திப்பட்டு பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் கம்பெனியில், வேலை செய்து வந்தார். கடந்த ஏப்ரல் 25ம் தேதி, அறையில் தங்கியிருந்தவர் காணாமல் போனார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது உறவினர் அஜய் கொடுத்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.