உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு

கலை இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளர் சங்கம் சார்பில் சொசியேத்தே புரோகிரேசீஸ்த் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள், கலை இலக்கிய போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளியின் தாளாளர் வேதானந்தம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருமலைவாசன் வரவேற்றார். சங்கத் தலைவர் வேல்முருகன் சிறப்புரை ஆற்றினார். துணைத் தலைவர்கள் உசேன், நெல்லைராசன், பொருளாளர் ராமஜெயம், துணை செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தனர்.பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் செவாலியர் சச்சிதானந்தம், துரைமாலிறையன், பூங்கொடி பராங்குசம், ராஜன், இணைச் செயலர் குலசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், மாணவர்களிடையே திருக்குறள் ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், கட்டுரை, வாசிப்பு திறன், கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை செயலாளர் அசோகா சுப்ரமணியன் செய்திருந்தார். பள்ளி ஆய்வாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, காமராஜர் உருவப்படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாணவி விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ