உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல்கலைக்கழக கல்லுாரிகள் இடையே டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு

பல்கலைக்கழக கல்லுாரிகள் இடையே டேபிள் டென்னிஸ் போட்டி பரிசளிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டன. புதுச்சேரி பல்கலைக்கழக கல்லுாரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த 15 கல்லுாரிகளை சேர்ந்த மாணவியர் அணிகள் கலந்து கொண்டன. கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் முருகவேல் போட்டிகளை துவக்கி வைத்தார். கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் முகமது அசிம் முன்னிலை வகித்தார். பல்வேறு சுற்றுகளாக நடந்த டேபிள் டென்னிஸ் போட்டிகளில், இறுதிப் போட்டியில் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி முதல் இடத்தையும், அவ்வையார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் முருகவேல் கோப்பைகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை