உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

 பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

புதுச்சேரி: நம் குழந்தை நம் கடமை ஸ்வர்னிம் புதுச்சேரி குழு சார்பில், உலக மனநல மாதமான, கடந்த அக்டோபர் மாதத்தில், 'என் மனநலம்' எனும் தலைப்பில், போஸ்டர் வரைபடம் வரைதல், வாக்கியம் எழுதுதல், குழு படம் வரைதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரியில் உள்ள 10 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காலாப்பட்டு எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெத்துசெட்டிப்பேட் பண்டித் துரைசாமி அரசு உயர்நிலைப் பள்ளியில் பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. இதில், நம் குழந்தை நம் கடமை ஸ்வர்னிம் புதுச்சேரி குழுவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார், பவித்ரா, குணலட்சுமி, கணேசமூர்த்தி மற்றும் தேவி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை