உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு

அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு

புதுச்சேரி: அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.சுசிலாபாய் அரசு பெண்கள் துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை வட்ட துணை ஆய்வாளர் குலசேகரன் துவக்கி வைத்தார்.பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.தொடர்ந்து கண்காட்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.பெற்றோர்கள் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டனர். அறிவியல் படைப்புகள் குறித்து பள்ளி மாணவர்கள் விளக்கம் அளித்தனர். சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் சுபாஷ், சிவபிரகாசன், பழனி, மைதிலி, தேவி, ஜெகதீஸ்வரி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை