உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி மாநில எம்.ஜி.ஆர்., பேரவை சார்பில் 11வது ஆண்டாக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, தமிழ்ச் சங்கத்தில் நடந்தது.பேரவை தலைவர் சுப்ரமணியன் துவக்கவுரை ஆற்றினார். உயர்மட்ட குழு உறுப்பினர் சுத்துக்கேணி பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். உயர்மட்டக்குழு உறுப்பினர் பரமேஸ்வரி வரவேற்றார்.தொடர்ந்து, கடந்த 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, ஓய்வு பெற்ற கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், கிருஷ்ணகுமார், பேரவை பொருளாளர் ரங்கநாதன், இணை செயலாளர் சாம்ராஜ், உயர்மட்டக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், கவிஞர் சரவணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.விழாவில், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சித்தானந்தம், கோதண்டபாணி, தாசில்தார் பிரபாகரன், தரணிதேவி வெற்றிவேல், மாசிலாமணி, மூத்த வழக்கறிஞர் வைத்திலிங்கம், அன்பழகன், அரிகிருஷ்ணன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.துணைத் தலைவர் ஜெயராம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை