போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு
புதுச்சேரி : பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி மனையியல் துறையின் கீழ் கல்லுாரி வளாகத்தில் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியை திவ்யலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ராஜிவ்காந்தி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ஹன்னா மோனிஷா, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் துறை தலைவர் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். கலை, கைவினை, பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கி பாராட்டினர். மனையியல் தறை தலைவர் தனலட்சுமி வாழ்த்தி பேசினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில், பெற்றோர்கள், கல்லுாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் மல்லிகேஸ்வரி, துறை பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை தேவிபிரியா நன்றி கூறினார்.