உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு

 கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு

புதுச்சேரி: கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தட்டாஞ்சாவடி அரசு துவக்க பள்ளியில் 2025--26கல்வி ஆண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைமை ஆசிரியர் கீதா நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக ஊர் தலைவர்கள் ஞான சேகர், மூர்த்தி, மணி, நித்தியானந்தம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், அழகிய கையெழுத்திற்காக ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்ணை குழு உறுப்பினர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ