உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேக்வோண்டா போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

தேக்வோண்டா போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

புதுச்சேரி: தேக்வோண்டா போட்டியில் வெற்றி பெற்ற கல்லுாரி அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியின் உடற்கல்வி யோகா துறையின் சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான தேக்வோண்டோ போட்டி லாஸ்பேட்டை விளையாட்டு அரங்கில் நடந்தது.போட்டியை விளையாட்டு இளைஞர் நல துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், சமுதாயக் கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நடத்த போட்டியில், 14 ஆண்கள் கல்லூரிகளும், 9 பெண்கள் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை சமுதாய கல்லூரி மாணவர்களும், பெண்கள் பிரிவில் பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகளும் வென்றனர்.ஏற்பாடுகளை உடற்கல்வி துறையின் உதவி பேராசிரியர்கள் ஜெகதீஸ்வரி, வைரமுத்து, தென்னவன், அலுவலர் செல்வம் மற்றும் உடற்கல்வித்துறை மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை