உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டெங்கு பரவலை கட்டுப்படுத்தவேண்டும்: தற்காலிக சபாநாயகர் முதல்வரிடம் மனு

டெங்கு பரவலை கட்டுப்படுத்தவேண்டும்: தற்காலிக சபாநாயகர் முதல்வரிடம் மனு

புதுச்சேரி: டெங்கு பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் தினமும் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள், டாக்டர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு் சிகிச்சை அளிப்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால், நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப் பணியிடங்களை உடன் நிரப்பவேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாக டெங்கு நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாநிலம் முழுதும் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். டெங்குவால் பாதிக்கப்பட்டு இதுவரை 2 பேர் இறந்துள்ளதால், மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதாரத் துறை இயக்குநரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை