உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முற்போக்கு எழுத்தாளர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

முற்போக்கு எழுத்தாளர்  சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி மாநாடு, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, முற்போக்கு எழுத்தளர் கலைஞர்கள் சங்க புதுச்சேரி சிறப்பு தலைவராக சண்முகசுந்தரம், தலைவராக விநாயகம், செயலாளராக பச்சையம்மாள், பொருளாளராக பக்தவச்சலம், துணை தலைவர்களாக கலியமூர்த்தி, உமாஅமர்நாத், வேலாயுதம், ேஹமாவதி, துணை செயலாளர்களாக லெனின்பாரதி, ரமேஷ்பைரவி, கலைச்செல்வன், மதுமிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுடன் 35 பேர் கொண்ட மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ