உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன  ஆர்ப்பாட்டம்

கண்டன  ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, புதுச்சேரியில் மா.கம்யூ., மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியன சார்பில், காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., மற்றும் அமித்ஷாவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.அதேபோல் கரியமாணிக்கத்தில் மத்திய அமைச்சரை கண்டித்து வி.சி., மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !