உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: சி.ஐ.டி.யு., அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு. மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர்கள் குமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளையும், அணுசக்தி மற்றும் மின்துறை தனியார் மயம், ப்ரீபெய்டு மின் மீட்டர் திட்ட மசோதாவையும் வாபஸ் பெற வேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் புதிய சட்டத்தையும், எல்.ஐ.சி., நிறுவனத்தை, தனியார் மயமாக்கும் சட்டம், விதை உரிமைச் சட்ட மசோதா 2025ஐ கைவிட வேண்டும் . போக்குவரத்து வாகனங்களின் உயர்த்தப்பட்ட எப்.சி., கட்டணத்தை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, புதுச்சேரி காமராஜர் சிலை சந்திப்பில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். நேரு வீதி - கேன்டீன் வீதி சந்திப்பில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ரவிச்சந்திரன், முருகன், கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், சங்கர், ராமசாமி, மதிவாணன், மணிபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ