மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாணவிகள் வெற்றி
14-Oct-2025
புதுச்சேரி: தனியார் மருத்துவ கல்லுாரியில் டெக்னீஷியன்கள் பாலியல் தொல்லையை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் அலையடு ெஹல்த் துறையில் எம்.ஆர்.டி., துறையில் பயிலும் மாணவிகளுக்கு எக்ஸ்-ரே டெக்னீஷியன் இருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உள் புகார் விசாரணை குழு விசாரணை நடத்தி, ஒருவரை பணி நீக்கம் செய்யவும், மற்றொருவரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்துவிட்டு, பின்னர் மாணவிகளுக்கு தொடர்பு இல்லாத வகையில் நகர பகுதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், சஸ்பெண்ட் டெக்னீஷியன் மீண்டும் கல்லுாரிக்கு வந்ததை கண்ட மாணவிகள், நேற்று முன்தினம் கல்லுாரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டம் 2ம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. மாணவிகளுக்கு ஆதரவாக சட்டக் கல்லுாரி மாணவர்கள், எஸ்.எப்.ஐ., மற்றும் மாணவர் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த எக்ஸ்-ரே டெக்னீஷியன் இருவரையும் பணியில் இருந்து டிஸ்மில் செய்ய வேண்டும். இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டம் நடத்திய மாணவிகளிடம் போலீசார் நேற்று மாலை பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மாலை 6:00 மணிக்கு மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வழக்கு பதிய முடிவு மாணவிகளில் போராட்டம் தீவிர மடைந்ததை தொ டர்ந்து போலீசார் விசாரித்தனர். உள்புகார் குழு இருவரையும் பணி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதால், புகாரின் அடிப்படையில் வழக்கு பதி வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
14-Oct-2025