மேலும் செய்திகள்
27ல் வேளாண் குறைதீர் கூட்டம்
25-Sep-2024
புதுச்சேரி : புதுச்சேரியில், வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறை தீர்வு கூட்டத்தில், ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிற்பேட்டை தொழில் வணிக இயக்குனரகம் மாநாட்டு அரங்கில், வருங்கால வைப்பு நிதி தொடர்பாக, நேற்று காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், ஏ.ஐ.யு.டி.யு.சி தொழிற்சங்க மாநில செயலாளர் சிவக்குமார், வருங்கால வைப்பு நிதி அதிகாரி மாலாவிடம் கோரிக்கை மனு அளித்தார். உறுப்பினர் கனகராஜ், வருங்கால வைப்பு நிதி அமலாக்க அதிகாரி ரவிச்சந்திரன், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக தட்டாஞ்சாவடி கிளை மேலாளர் சங்கரதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
25-Sep-2024