மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
18-Jun-2025
பாகூர் : மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டது.கோயம்புத்துார் சிட்டி ரவுண்ட் டேபிள்-31, கோயம்புத்துார் சிட்டி லேடீஸ் சர்க்கிள்-16, பாண்டிச்சேரி ரிவாஜ் ரவுண்ட் டேபிள்-104, பாண்டிச்சேரி ரிவாஜ் லேடீஸ் சர்க்கிள்-47 ஆகிய அமைப்புகள் இணைந்து, மாற்றுத் திறனாளிகளின் சுயநினைவு, உடல் இயக்க திறன் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை உடல் உறுப்புகளை வழங்கி வருகிறது.அதன்படி, இரண்டாவது ஆண்டாக, புதுச்சேரியில்மாற்றுத்திறனாளிளுக்கு 30 செயற்கை கால்கள் மற்றும் கைகள், 30 காதொலி கருவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில், அமைச்சர் தேனீ ஜெயகுமார், பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளை வழங்கி, பேசினர். விழாவில், ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
18-Jun-2025