உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சண்முகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிரகாஷ்குமார் எல்.எல்.ஏ., மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் (நிலை -2) சிவக்குமார், ஆசிரியர் வானதி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ