உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கல்

புதுச்சேரி: மங்கலம் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்பை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மங்கலம் தொகுதிக்குட்பட்ட விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கண்ணகி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை