உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆஷா பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

ஆஷா பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மெரினா சார்பில், கிராமதத்தெடுப்பு திட்டத்தின் கீழ் ஆஷா பணியாளர்களுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கி, முதலியார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 31 ஆஷா பணியாளர்களுக்கு இலவச சீருடை, குடை மற்றும் கைப்பை வழங்கினார். இதில், சங்கத் தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் யுவராஜ், கந்தன் உள்ளிட்ட மெரினா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !