அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி: புதுச்சேரி, புதுப்பாளையம் தியாகி துரை முனிசாமி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமையாசிரியர் ரேவதி வரவேற்றார். புதுச்சேரி கல்வித்துறை வட்டம்-1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சுப்ரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பவானி பரசுராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பள்ளி ஆசிரியை காயத்ரி கண்ணன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை, வாய்ப்பாடு அட்டை, எழுது பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அஸ்வினி, மீனா, பாலசேவிகா ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை கார்த்திகா நன்றி கூறினார்.