உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கல் 

விசைப்படகு மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கல் 

புதுச்சேரி: புதுச்சேரியில் பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கான டீசல் மானியத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் பதிவு பெற்ற மீன்பிடி விசைப்படகுகளுக்கு, அவர்கள் கொள்முதல் செய்யும் டீசலுக்கு மானியமாக லிட்டர் ஒன்றிற்கு ரூ.12 வீதம் (வாட் வரி விலக்கு உட்பட) கடந்த ஆண்டிலிருந்து காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, இத்திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டிற்கான ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு, புதுச்சேரி பகுதியை சேர்ந்த 100 பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய, மீதமுள்ள டீசல் மானிய தொகையான ரூ.57 லட்சத்து 14 ஆயிரத்து 794 அரசின் செலவின ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.எனவே, புதுச்சேரியை சேர்ந்த பதிவு பெற்ற விசைப்படகு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கில் டீசல் மானிய தொகை நேற்று(25ம் தேதி) முதல் செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ