மழைக்கால பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல்
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் மழை காலம் மற்றும் புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உபகாரணங்களை டாக்டர் நாராயணசாமி கேசவன் வழங்கினார். உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ஜெ.ஜெ., நகரில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்த உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன், மூன்றாம் கட்ட நிதியுதவி மற்றும் 25 குடிசை வாழ் மக்களுக்கு மழைப் பாதுகாப்பு தார்பாயினை தனது சொந்த செலவில் வழங்கினார். நிகழ்ச்சியில், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.