அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல்
அரியாங்குப்பம்: அரசு துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மணவெளி தொகுதி புதுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் செல்வம், மாணவர்களுக்கு சீருடை, தம்ளர், தட்டு, ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளிகளின் வட்ட ஆய்வாளர் வாஞ்சிநாதன், தலைமை ஆசிரியர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.