உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

புதுச்சேரி : உழவர்கரை தொகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பணி புரியும் தொழிலாளர் ஒருங்கிணைப்பில் உலக உழைப்பாளர் தின விழா நடந்தது. உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி பங்கேற்று, 4 நபர்களுக்கு தள்ளுவண்டி, 2 பெண்களுக்கு தையல் இயந்திரம், சாலையோர தொழிலாளர்கள் 2 பேருக்கு பூக்கடைகள் என, தன் சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து உணவு வழங்கினார்.கோடைக்காலத்தையொட்டி, அனைத்து மக்கள் பயன்பெறும் வகையில், நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். உழவர்கரை தொகுதி ஜவகர் நகர், ரெட்டியார் பாளையம் பஸ் நிறுத்தம், மூலக்குளம், பத்மாவதி மருத்துவமனை பஸ் நிறுத்தம், எம்.ஜி.ஆர்., நகர் நுழைவாயில் பகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.நீர் மோர் பந்தல் 50 வது நாளையொட்டி, நீர்மோர் பந்தலுக்காக சேவையாற்றிய உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர்கள், தொண்டர்களுக்கு டாக்டர் நாராயணசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை