பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம்
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., அனைத்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) மூலம் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.பி.ஆர்.டி.சி., யில் கடந்த 2015ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 276 ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனால், புதுச்சேரி அரசு அதன் மீதுஎந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் அனைத்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளனர்.இதனால் புதுச்சேரி அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாமல், பனிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.இதற்கிடையே புதுச்சேரி அரசு பஸ்கள் இயங்காத நிலையில் தனியார் மற்றும் தமிழக அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது.இதே போல், காரைக்காலிலும் பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.