மேலும் செய்திகள்
நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
13-Jun-2025
புதுச்சேரி : பணி நிரந்தரம் செய்யக்கோரி, பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் வரும் 28ம் தேதி, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து, புதுச்சேரி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கை:சாலை போக்குவரத்து கழகத்தில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது, ஊதியக்குழுவை அமல்படுத்து குறித்து கடந்த 6ம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தொடர்ந்து, நாளை 14ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து, பணி செய்வது. வரும் 21ம் தேதி பி.ஆர்.டி.சி., முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, அதனை தொடர்ந்து, 28ம் தேதி, தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.ஆகவே, பி.ஆர்.டி.சி., நிர்வாகம், ஊழியர்களை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Jun-2025