உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., சங்க நிர்வாகிகள் தொ.மு.ச.,வில் இணைந்தனர்

பி.ஆர்.டி.சி., சங்க நிர்வாகிகள் தொ.மு.ச.,வில் இணைந்தனர்

புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., யில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் தொ.மு.ச.,வில் இணைந்தனர்.புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் டேனியல், வரதப்பநாயுடு, சங்கர், ரமேஷ், தீனதயாளன், காத்தவராயன், பச்சையம்மாள், கார்த்திகேயன், கருணாமூர்த்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் தங்கள் சங்கத்தில் இருந்து விலகி தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் தொ.மு.ச.,வில் இணைந்தனர். எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், 'பி.ஆர்.டி.சி.,யில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் 10 ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யாமல் உள்ளனர். ஊழியர்களின் எந்த கோரிக்கையையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களின் கோரிக்கைகள் குறித்து வரும் 2ம் தேதி முதல்வரை சந்தித்து, குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்த உள்ளோம். தமிழ்நாடு சாலை போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தமிழ்நாடு அரசு செய்துள்ளது அதனை புதுச்சேரியிலும் செயல்படுத்த வலியுறுத்துவோம்' என்றார்.நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் குமார், கோபால், சக்திவேல், நடராஜன், மணிமாறன், காயத்ரி ஸ்ரீகாந்த், பாஸ்கரன், தொ.மு.ச., மாநில நிர்வாகிகள் அண்ணா அடைக்கலம், அங்காளன், மிஷேல், காயாரோகணம், சிவக்குமார், துரை, சீனு, கண்ணன், தொ.மு.ச., நிர்வாகிகள் ராஜேந்திரன், திருக்குமரன், பாலகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை