உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பேனர் வைத்த போலீசார் பொதுமக்கள் அதிருப்தி

பேனர் வைத்த போலீசார் பொதுமக்கள் அதிருப்தி

புதுச்சேரியில் பேனர் கலாசாரம் குறித்து நீதிமன்றம் எச்சரித்த பின்பு பேனர் வைப்பது சற்று குறைந்துள்ளது.இந்நிலையில், புதுச்சேரியில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தி நிலை நாட்ட வேண்டிய போலீசாரே, நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பர பேனர் வைப்பது வியப்பாக உள்ளது. சமீபத்தில் போலீஸ் நலச்சங்கம் சார்பில் கோரிமேடு போலீஸ் மைதானம் அருகே ஷில்பி ஷாப்பில் பொதுமக்களுக்கான குறைந்த விலை பட்டாசு பாக்ஸ் விற்பனை துவக்கப்பட்டது. பட்டாசு விற்பனை தொடர்பாக போலீசார் கதிர்காமம், மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையோர மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் கட்டினர்.பேனர்களை ஒழிக்க வேண்டிய போலீசாரே விதிகளை மீறி விளம்பர பேனர் வைத்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை