மேலும் செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் மக்கள் மன்றம்
30-Mar-2025
பாகூர்: பாகூர் போலீஸ் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.புதுச்சேரி தெற்கு பகுதி எஸ்.பி., பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.இன்ஸ்பெக்டர்கள் சஜித், கலைச்செல்வன், சப்இன்ஸ்பெக்டர்கள் பிரபு, விஜயகுமார், முருகானந்தம், குமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள், எஸ்.பி.,யிடம்,தங்களது புகார்களை தெரிவித்தனர். மேலும், 'கிராம பகுதிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும்.பாகூர் மார்க்கெட் வீதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட வேண்டும். லாட்டரி சீட்டுகள் விற்பனை மற்றும் மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கையை உயர்த்திட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
30-Mar-2025