உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் ; பொதுப்பணித்துறை தகவல்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் ; பொதுப்பணித்துறை தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் உற்பத்தி நிலையம் டிசம்பர் மாதத்திற்கு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மக்களுக்கு தரமான குடிநீர் வழங்கிட, உவர் நீரை சுத்திகரித்து குடிநீர் ஆக்கும் திட்டத்தில், தினமும் ஒரு மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் சுதேசி காட்டன் மில் வளாகத்தில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல் பிருந்தாவனம் குடிநீர் இறவை நிலையத்திலும், இ.சி.ஆர்., சித்தானந்தா கோவில் அருகில் குடிநீர் இறவை நிலையத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான பணிகள் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் தினமும் ஒரு மில்லியன் லிட்டர் உவர் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரப்படவுள்ளது. இவை அனைத்தும் நபார்டு வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் ஒரு வாரத்தில் கோரப்பட்டு, வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அமைக்க எஸ்.ஏ.சி.எஸ்.சி.ஐ., திட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை