பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு
புதுச்சேரி; புதுச்சேரி பொதுப்பணித் துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் சார்பில் சம்பள உயர்வு வழங்கக்கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள் ளனர்.புதுவை பொதுப்பணித்துறை தொழில்நுட்ப உழியர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், அரசு ஊழியர் சம்ளமேள அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் குணசேகரபாண்டியன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் முனுசாமி, ஆலோசகர் ஞானசேகரன், சங்க ஆலோசகர் அப்துல் அஜிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கடந்த 2005ல் பணி அமர்த்தப்பட்ட எம்.டி.எஸ்., ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி பொதுசுகாதரத்துறை முன்பு, ஜூலை 2ம் தேதி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் ஜூலை 14ம் தேதி வரை பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றினர்.