உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் ஐ.டி., பார்க்

புதுச்சேரியில் ஐ.டி., பார்க்

புதுச்சேரி : 'மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரியில் ஐ.டி., பார்க் அமைக்க வேண்டும்', என, அசோக் ஆனந்து எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அசோக் ஆனந்து: புதுச்சேரியில் படித்த பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனர். புதுச்சேரியிலேயே ஐ.டி., பார்க் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளதா...அமைச்சர் கல்யாணசுந்தரம்: சிறப்பு பொருளாதார மண்டல தகவல் தொழில்நுட்ப பூங்காவை புதுச்சேரியில் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அசோக் ஆனந்து: எப்போது அமைக்கப்படும்...அமைச்சர் கல்யாணசுந்தரம்: மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற பின், விரைவில் அமைக்கப்படும்.அசோக் ஆனந்து: புதுச்சேரியில் நிறைய மாணவர்கள் ஐ.டி., படித்துவிட்டு வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். பலர் சென்னை, ஐதராபாத், பெங்களூர் செல்கின்றனர். புதுச்சேரியில் ஐ.டி., பார்க் அமைத்தால் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும். அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைப்பதுடன், நமது மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மத்திய அரசை அணுகி விரைவில் அனுமதி பெற்று வர வேண்டும்.அமைச்சர் கல்யாணசுந்தரம்: நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை