உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர்கள் சந்திப்பு

புதுச்சேரி, தெலுங்கானா கவர்னர்கள் சந்திப்பு

புதச்சேரி : புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனுடன், தெலுங்கானா கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா சந்தித்து பேசினார்.தமிழகத்துக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தெலுங்கானா மாநில கவர்னர் ஜிஷ்ணு தேவ் வர்மா, நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வழியில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை, ராஜ்நிவாசில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.முன்னதாக, ராஜ்நிவாஸ் வந்த தெலுங்கானா கவர்னரை, புதுச்சேரி கவர்னர், பூச்செண்டு அளித்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரியின் வரலாறு, பண்பாடு, சுற்றுலாவை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து கலந்துரையாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி