மேலும் செய்திகள்
கூரை வீட்டின் சுவர் விழுந்து மூதாட்டி பலி
18-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் பகுதியில் தீபாவளி பார்ட்டியின் போது, ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, குமரகுரு பள்ளத்தைச் சேர்ந்தவர் வினோத், 34; ஆட்டோ டிரைவர். இவர், பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் அருகில் உள்ள கஜபதி என்பவரது வீட்டின் எதிரே கடந்த 8ம் தேதி அதிகாலை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து பிள்ளைதோட்டம் கங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்த சபாபதி மகன் கஜபதி (எ) வினோத் (எ) மலேசியா வினோத், 35; முத்தியால்பேட்டை, கணேஷ் நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நரி (எ) வெங்கடேஷ், 29; ஆகிய இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ டிரைவரான வினோத் கடந்த 7 ம் தேதி நள்ளிரவு வெங்கடேஷ் உடன், பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த கஜபதி வீட்டிற்கு சென்று தீபாவளியை முன்னிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் கஜபதி, வினோத்தை அவரது வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் கோபமடைந்த கஜபதி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, வினோத்தை கழுத்தில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. இதையடுத்து, இருவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
18-Oct-2026