உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேர்தல் பிரசாரத்தை துவக்கிய புதுச்சேரி பா.ஜ., ரூ.25 லட்சத்தில் ைஹடெக் டிஜிட்டல் வேன் ரெடி

தேர்தல் பிரசாரத்தை துவக்கிய புதுச்சேரி பா.ஜ., ரூ.25 லட்சத்தில் ைஹடெக் டிஜிட்டல் வேன் ரெடி

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், புதுச்சேரியில் பா.ஜ., சார்பில் டிஜிட்டல் வேன் பிரசாரம் துவக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., முழு வீச்சில் தயாராகி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால், அனைத்து மாநிலங்களிலும் பயன் அடைந்துள்ள பயனாளிகளை சந்தித்தும், புதிய பயனாளிகளை முழுவீச்சில் சேர்த்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுச்சேரி பா.ஜ., சார்பில், லோக்சபா பிரசாரம் நேற்று துவங்கியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் நவீன டிஜிட்டல் வேன் தயாராகி உள்ளது. ரூ. 25 லட்சம் செலவில் இந்த வேன் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்த திட்டங்கள், அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பலன்கள், யார் யாருக்கு எந்தெந்த திட்டம் போன்றவற்றை விரிவாக விளக்கி வீடியோ காட்சியாக இடம் பெற்றுள்ளது.இந்த டிஜிட்டல் வேனை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுக்க அனுப்பி மக்களிடையே பா.ஜ., அரசின் சாதனைகளை கொண்டு செல்ல பா.ஜ., திட்டமிட்டுள்ளது. அடுத்து டில்லி வரையிலும் பல மாநிலங்கள் வழியாக இந்த சிறப்பு டிஜிட்டல் வேன் பிரசாரம், 'மீண்டும் மோடி... வேண்டும் மோடி...' என்ற கோஷத்துடன் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ