வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாடகமே உலகம்
புதுச்சேரி: வயநாடு தொகுதியில் காங்., வேட்பாளர் பிரியங்காவிற்கு ஆதரவாக புதுச்சேரி காங்., தலைவர்கள், நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்ர. வயநாடு எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால் காலியாக அந்த தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடை தேர்தல் நடக்கின்றது. இதில், காங்., வேட்பாளராக பிரியங்கா போட்டிடுகின்றார். அவர் வயநாட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.காங்., வேட்பாளர் பிரியங்காவை ஆதரித்து புதுச்சேரியில் இருந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்.,மாநில தலைவர் வைத்திலிங்கம், காங்., சட்டசபை கட்சி தலைவர் வைத்தியநாதன், மாகி எம்.எல்.ஏ., ரமேஷ் பரம்பத், தலைமையில் மாநில நிர்வாகிகள் ஓட்டுசேகரிப்பு ஈடுபட்டனர்.நேற்று வயநாடு மார்க்கெட் பகுதியில் காங்., கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேகரித்தனர்.
நாடகமே உலகம்