மேலும் செய்திகள்
பழங்குடியின பெண் கொலை; கணவனுக்கு ஆயுள் தண்டனை
27-Sep-2024
வாலிபர் கொலை வழக்கு 3 பேருக்கு ஆயுள்
25-Sep-2024
வில்லியனுார்: வில்லியனுார் அருகே, வாலிபரை வெட்டி கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பளித்தது.புதுச்சேரி, வில்லியனுார் அருகே உள்ள கரையான்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன்- லலிதா தம்பதியரின் மகன் இளவரசன்,24; எம்.காம்., பட்டதாரி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மாலை 7:00 மணியளவில் கரையான் பேட்டையிலிருந்து தனது நண்பர் இன்பரசனுடன் கணுவாப்பேட்டை பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் ஊற்றுவதற்காக பைக்கில் சென்றனர்.கணுவாப்பேட்டை மூன்றாவது வன்னியர் வீதி, அங்காளம்மன் கோவில் வளைவில் சென்றபோது ஒரு கும்பல் இளவரசனை மடக்கி சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, கணுவா பேட்டையை சேர்ந்த தாடி அய்யனார், மணிகண்டன், அஜித்குமார், அருண் மற்றும் அருள்பாண்டியன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில் புதுச்சேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகர், வழக்கில் தொடர்புடைய தாடி அய்யனார் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ 9,500 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால், மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரானார்.
27-Sep-2024
25-Sep-2024