உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு

இருவருக்கு 5 ஆண்டுகள் சிறை புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு

நெட்டப்பாக்கம் : மடுகரையில் நடந்த இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில், ஒருவரை கத்தியால் குத்திய இருவருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.புதுச்சேரி மாநிலம், மடுகரையில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கம் புது காலனியைச் சேர்ந்த மதியழகன் என்பவருக்கும், முத்துநகரை சேர்ந்த அய்யனார் மகன் தீனதயாளன், 23, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அன்று இரவு 8:00 மணிக்கு வீட்டில் இருந்த மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் 26, ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தீனதயாளன், சுதந்திரராஜ் இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் ராஜூ வாதாடினார். நேற்று விசாரணை முடிந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி சிவகுமார் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி