உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சேலியமேட்டில் உறியடி உற்சவம்

சேலியமேட்டில் உறியடி உற்சவம்

பாகூர் : சேலியமேட்டில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு, உறியடி உற்சவம் நடந்தது. பாகூர் அடுத்த சேலியமேடு கிருஷ்ணர் கோவிலில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. இதனையொட்டி உறியடி, சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். திண்டிவனம் நம்மாழ்வார் சபை குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ