உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இயக்குனரின் சுற்றறிக்கை எம்.எல்.ஏ.,க்கள் புகார்

இயக்குனரின் சுற்றறிக்கை எம்.எல்.ஏ.,க்கள் புகார்

புதுச்சேரி : கல்வித் துறை இயக்குனரின் சுற்றறிக்கை தொடர்பாக சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் சரமாரி புகார் தெரிவித்தனர். சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில் பாஸ்கர் பேசியதாவது: கல்வித்துறை இயக்குனர், சில தினங்களுக்கு முன், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், வெளிசெல்வாக்கு உள்ளவர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மூலம் எந்த உதவியும் கேட்கக் கூடாது என்று கூறியுள்ளார். சிபாரிசுக்கு யாரை வர வேண்டாம் என்று இயக்குனர் கூறுகிறார்... முதல்வரை கூறுகிறாரா... கல்வித் துறை அமைச்சரை கூறுகிறாரா... இவர்கள்தான் அவரிடம் தினமும் பேசுகின்றனர். துறைரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் முறையிடுகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு கேட்கக் கூடாதா... இந்த அதிகாரத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்கிறார்... அரசுக்கு கீழ் அவர் உள்ளாரா... அவருக்கு கீழ் அரசு உள்ளதா... இவ்வாறு பாஸ்கர் கூறினார். நாஜிம் எம்.எல்.ஏ., பேசும்போது, 'அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,.க்கள் சிபாரிசு செய்வது வழக்கம். கல்வித் துறை முறையாக இயங்குகிறதா... வேண்டியவர்கள் மட்டும் மாற்றல் உத்தரவை பெறுகின்றனர். இது நியாயமா...' என்று கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்