உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கார் டீலர்ஷிப்பிற்கு ஆசைப்பட்டு ரூ.37.70 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

கார் டீலர்ஷிப்பிற்கு ஆசைப்பட்டு ரூ.37.70 லட்சம் இழந்த புதுச்சேரி நபர்

புதுச்சேரி: கார் டீலர்ஷிப்பிற்கு விண்ணப்பித்து, புதுச்சேரியை சேர்ந்த நபர் ரூ. 37.70 லட்சம்ரூபாயை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.புதுச்சேரி, சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த நபர் ஒருவர், கார் டீலர்ஷிப் தொடர்பாக ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, ஒரு கார் நிறுவனத்தை கண்டறிந்து, டீலர்ஷிப்புக்குவிண்ணப்பித்துள்ளார். பின், அந்த நிறுவனத்தில் இருந்து, அந்த நபருக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், கார் டீலர் ஷிப்பிற்கு பதிவு கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டிருந்தது.இதை நம்பிய அவர், அந்த நிறுவனத்திற்கு 37 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த நிறுவனத்திடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது.உருளையன்பேட்டையை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், நண்பரை போல் பேசியுள்ளார். அப்போது, விசா விண்ணப்பத்திற்கு தனக்கு உதவும் படி கூறி அந்த நபரின் ஏ.டி.எம்., கார்டு விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., எண்ணை கேட்டுள்ளார். அவரும், தனது நண்பர் தான் பேசுகிறார் என நினைத்து, ஓ.டி.பி., எண்ணை பகிர்ந்துள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரை, தொடர்பு கொண்ட நபர் ஆன்லைனில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய அவர், 16 ஆயிரத்து 600 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். பிச்சைவீரன்பேட்யை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக 64 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.இதுபோல், ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் 42 லட்சத்து 40 ஆயிரத்து 100 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை