உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குறைந்த விலைக்கு மொபைல் போன் ரூ.96 ஆயிரம் இழந்த புதுச்சேரி நபர்

குறைந்த விலைக்கு மொபைல் போன் ரூ.96 ஆயிரம் இழந்த புதுச்சேரி நபர்

புதுச்சேரி: குறைந்த விலைக்கு மொபைல் போன் ஆர்டர் செய்து, ரூ.96 ஆயிரத்தை மோசடி கும்பலிடம் புதுச்சேரி நபர் இழந்துள்ளார். புதுச்சேரி, குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர், ஆன்லைனில் பழைய மொபைல் போன்களை, குறைந்த விலைக்கு விற்பனை செய்து தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர், அதில் இருந்த ஒரு மொபைல் போனை ஆர்டர் செய்து, பல்வேறு தவணைகளாக 96 ஆயிரம் அனுப்பியுள்ளார்.ஆனால், ஆர்டர் செய்த மொபைல் போன் சரவணனுக்கு, இதுவரையில் வரவில்லை. மேலும், ஆன்லைனில் 69 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்த சரவணன், மோசடி கும்பலிடம் மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 500 ரூபாய் ஏமாந்துள்ளார். மூலகுளத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டில் இருந்தபடி, ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.இதைநம்பிய தினேஷ் 69 ஆயிரத்து 700 ரூபாய் மர்ம நபருக்கு அனுப்பி இழந்துள்ளார். லாஸ்பேட்டையை சேர்ந்த சுபாஷினி 10 ஆயிரம், பாகூரை சேர்ந்த மணிமாறன் 1000 என 4 பேர் மோசடி கும்பலிடம் 2 லட்சத்து 46 ஆயிரத்து 200 இழந்துள்ளனர்.புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ