உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் ஜம்மு காஷ்மீர் பயணம்

புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் ஜம்மு காஷ்மீர் பயணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தற்காலிக சபாநாயகர் உட்பட எம்.எல்.ஏ.,க்கள் 17 பேர் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் ஜம்மு காஷ்மீருக்கு 5 நாள் களப்பயணம் செல்கின்றனர். புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் அனைவரும் டில்லி செல்கின்றனர். பின், அங்கிருந்து விமானம் மூலம் ஜம்மு செல்கின்றனர். இதில் அவர்கள் ஜம்மு காஷ்மீர் சட்டசபை நிகழ்வுகள், நிர்வாக அமைப்புகள் குறித்து கலந்துரையாடுகின்றனர். இப்பயணத்தில் அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, வையாபுரிமணிகண்டன், ரவிக்குமார், அய்யப்பன், மோகன்தாஸ், மீனாட்சிசுந்தரம், அசோக்ஆனந்த், செந்தில்குமார், ஊசுடு கார்த்திகேயன், நெல்லித்தோப்பு கார்த்திகேயன், விக்னேஷ்கண்ணன், சாய்சரவணன்குமார், ராமு, அழகானந்தம், விக்னேஸ்வரன், சட்டசபை செயலர் தயாளன் உள்ளிட்டோர் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை