பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் புதுச்சேரி நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
புதுச்சேரி பொது இடங்களில் உள்ள பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை ஐகோர்ட் மதுரை கிளையின் ஆணைப்படி மாவட்ட கலெக்டர், புதுச்சேரியின் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பதாகைகள், கட் அவுட்கள், கொடி கம்பங்களை இன்று 2ம் தேதிக்குள் அகற்ற அனைத்து துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனடிப்படையில் புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட உட்புற சாலைகளில் ஆய்வு மேற்கொண்டதில், அரசியல் கட்சிகள், சமூகம், தொழிற்சங்கள், பிற கொடி கம்பங்கள் சில இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ளதாக கவனத்திற்கு வந்துள்ளது.எனவே, புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட உட்புற சாலைகள், பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்கள், பேனர்களை சம்பந்தப்பட்டவர்கள தாங்களாகவே முன் வந்து அகற்ற வேண்டும்.தவறும்பட்சத்தில் புதுச்சேரி நகராட்சி, வருவாய் துறை, காவல் துறை இணைந்து அகற்றப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.